ஏன் உங்கள் காதல் இவ்வளவு கசக்கிறது ?என்றாவது யோசித்து இருக்கிறீர்களா…

உலகில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் அனைத்து உயிரினங்களும் ஏங்கும் ஒரே ஒற்று போன விஷயம் காதல் தான்.இந்த உறவானது யார் மீது வேண்டுமானாலும் தோன்றலாம்.ஆனால் நீங்கள் நேசித்த காதல் உறவானது எந்த கட்டத்தில் அவர்களை வெறுக்கும் அளவிற்கு செல்கிறது என்றாவது யோதித்து இருக்கிறீர்களா…

தினம் தினம் ஒருவருடன் மட்டுமே பேசும் வார்த்தை, எதிர்பார்க்கும் அக்கறை, செலவிடும் நேரம் இப்படி ஒரு நாள் முழுவதுமே நீங்கள் ஒருவரை மட்டுமே சார்ந்து இருக்கிறீர்கள்.அந்த நபர் ஏதேனும் ஒரு வேளையில் உங்களிடம் பேச மறுத்தால் அது உங்களுக்கு வலியை ஏன் தருகிறது?.ஆரம்பத்தில் காதல் மிகவும் அழகாக தெரிந்தது போலும், இப்பொழுது காதல் குறைந்துவிட்டது போலும் உங்களுக்கு தோன்றுவது ஏன் தெரியுமா?

புதுப்பித்தல் :

ஆம்.உங்களின் காதல் கசப்பாக இருப்பதற்கு காரணம்,நீங்கள் அதை புதுப்பிக்க மறுந்துவிட்டீர்கள்.ஒருவருடன் முதலில் பேசும் பொழுது அவருக்கு பிடித்தது என்ன?பிடிக்காதது என்ன?என்று ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்ட நீங்கள்,அவர்களை பற்றி முழுவதும் அறிந்துக்கொண்ட பின் உங்களிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை என்ற நினைத்துகொள்கிறீர்கள்.

இப்படி தோன்றுவது இயல்பான ஒன்று.எந்த ஒரு பொருளாக இருந்தாலும், நாம் நீண்ட நாள் அதனை பயன்படுத்த வேண்டும் என்றால் அதை நாம் புதுப்பிக்க வேண்டும்.அது போல் தான் காதலும்.தினம் தினம் காதலை புதுப்பித்து உங்கள் அன்பானவரிடம் பகிர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.அப்படி புதுப்பிக்காத கட்டத்தில் தான், நீ மாறிவிட்டாய்.. என்ற எண்ணம் எழ ஆரம்பிக்கிறது.

காதலில் எப்பொழுதும் சண்டை வருவது இயல்பு, ஆனால் ஏதோ ஒரு சண்டையில் மட்டும் பிரிந்து செல்லும் முடிவை ஏன் கையில் எடுக்கின்றனர்.காரணம் என்ன தெரியுமா? இந்த உறவானது கசந்து விட்டது என அவர்களின் மனதில் என்றோ ஒரு எண்ணத்தை நீங்கள் விதைத்து இருக்கிறீர்கள். அது ஒரு வார்தையாக கூட இருக்கலாம், அதை மனதில் வைத்துக்கொண்டு தான் இந்த முடிவை எடுத்து பிரிந்து செல்கின்றனர்.

இருவரும் காதல் என்ற உறவில் பயணிக்கும் பொழுது, ஏன் ஒருவர் மட்டுமாவது உங்களின் காதலை காப்பாற்ற முயற்சி செய்ய கூடாது.அந்த ஒருவர் ஏன் நீங்களாக இருக்கக் கூடாது.அவள் வந்து பேச வேண்டும், அவன் வந்து பேச வேண்டும் என்ற ஈகோ இல்லாமல் இருந்தாலே காதலில் பிரச்சனை குறைந்து விடும்.அப்படி உங்களின் காதலில் ஈகோ இடம் பிடிக்கிறது என்றால், ஒன்று நீங்கள் அந்த நபரை முழுவதுமாக நேசிக்கவில்லை என்று அர்த்தம், இன்னொன்று காதலை விட உங்களின் சுய மரியாதை முக்கியமாக இருக்கிறது.இதில் நீங்கள் எப்படி என முடிவு செய்து கொள்ளுங்கள்.காதலுக்காக விட்டு கொடுக்க வில்லை என்றால், உங்களை காதல் விட்டு சென்று விடும்.

Exit mobile version