நேற்று நடைபெற்ற மகளிர் ப்ரீமியர் லீக் போட்டியில் ஆர்சிபி அணியும் உபி வாரியர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா உபி வாரியர்ஸை பேட்ட்ங் செய்ய பணித்தார். அதன்படி உபி வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்கமே உபிக்கு பேரிடியாக இருந்தது. அவர்களின் ஓபனிங்க் ஆட்டக்காரர்களான கேப்டன் அலிஷா ஹீலி 1 ரன்னிலும், தேவிகா வித்யா 0 ரன்னிலும் வெளியேறினர். பிறகு வந்த டகிலா மெக்ராத் 2 ரன்னில் வெளியேறினார். கிரேஸ் ஹாரிஸ் 46 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தார். இருப்பினும் முக்கியமான ஆட்டக்காரர்கள் யாரும் சரியாக ஒத்துழைக்காததால் 135 ரன்களுக்கு உபி அணி ஆல் அவுட் ஆனது. ஆர்சிபி அணி சார்பாக ஆல்ரவுண்டர் எல்லீஸ் பெரி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பின்னர் 136 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய ஆர்சிபி அணியானது முதலிலே தடுமாறத் தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 0 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இந்தத் தொடரில் இன்னும் சரியாக அவர் பார்மிற்கு வரவில்லை. சோபி டிவைன் 14 ரன்கள், எல்லிஸ் பெரி 10 ரன்கள், ஹீதர் க்நைட் 24 ரன்கள் அடிக்க கனிகா அஹுஜா 46 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினார். இறுதியில் ரிச்சா கோஷ் 31 ரன்கள் அடித்திருந்த நிலையில் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது ஆர்சிபி. இந்த வெற்றியின் மூலம் மகளிர் ப்ரீமியர் லீக்கில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது ஆர்சிபி. இதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. ப்ளேயர் ஆஃப் த மேட்ச் விருதினை 46 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திர்ர கனிகா அஹூஜா பெற்றுச் சென்றார்.