இந்தியாவில் தற்போது பெண்கள் ப்ரீமியர் லீக் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்றைக்கு நடந்த மேட்சில் பெங்களூர் அணி மும்பை அணியை எதிர்கொண்டது. பெங்களூர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அவர் உட்பட யாருமே பெரிதாக ரன்கள் சேகரிக்கவில்லை. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 28 ரன்கள் சேர்த்திருந்தார். இருபது ஓவர்கள் முடிவில் 155 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டையும் இழந்தது பெங்களூர் அணி. மும்பை சார்பாக ஹெய்லே மேத்யூஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
பிறகு 156 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் இலக்கை எட்டினர். ஓபனிங் இறங்கி விளாசிய ஹெய்லே மேத்யூஸ் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மேலும் ப்ளேயர் ஆஃப் த மேட்ச் விருதினையும் தட்டிச் சென்றார். இதனால் புள்ளிப்பட்டியலில் மும்பை அணி முதலிடத்திற்கு சென்றது.