பெண்கள் ப்ரீமியர் லீக் : டெல்லி கேப்பிடல்ஸை சுருட்டிய மும்பை இந்தியன்ஸ்!

பெண்கள் ப்ரீமியர் லீக்கானது தற்போது இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நெற்று நடைபெற்ற 7 வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மொதின. டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பமே ஷவாலி வர்மா 2 ரன்னிற்கு நடையைக் கட்ட, ஆலிஸ் கெப்பஸி 6, மரிசேனி கப் 2 என்று எடுக்க, மேக் லென்னிங்கும் ஜெமியா ரொடிக்ரூஸும் ஓரளவு பார்ட்னர்ஷிப்பினை தொடர்ந்தனர். அவர்கள் முறையே 43 மற்றும் 25 ஆகிய ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். பிறகு வந்த யாரும் சரியாக சோபிக்காததால் 105 ரன்களுக்கு 18 ஓவர்களில் மொத்த அணியும் சுருண்டது. மும்பை சார்பாக சிறப்பாக பந்துவீசிய நாட் ஷைகா இஷ்க், இஸ்ஸி வாங்க், ஹெய்லே மேத்யூஸ் போன்றவர்கள் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். Mid Day on Twitter: "#MiddaySports | WPL 2023: Mumbai Indians trounce Delhi  Capitals by eight wickets, seal third win on trot #WPL2023  #WomensPremierLeague #WPL #MumbaiIndians #DelhiCapitals #Win #DCvsMI  https://t.co/1h8C6T6rOv https://t.co/8dJf1w16rc ...

106 என்கிற எளிய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 15 ஓவர்களில் இலக்கை எட்டியது. யாசிகா, பாட்டியா நல்லத் தொடக்கத்தை வழங்கினர். இருவரும் சேர்ந்து 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில் யாஸ்திகா பாட்டியா 41 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.  ஹேலி மேத்யூஸ் 32 ரன்கள் இருந்தபோது வெளியேற, நாட் ஸ்கீவர் ப்ருண்ட் 23 ரன்னும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 11 ரன்னும் அடித்திருந்த நிலையிலேயே இலக்கானது எட்டப்பட்டது. 2 விக்கெட்டுகள் இழந்து 109 ரன்கள் சேர்த்திருந்த மும்பை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ப்ளேயர் ஆப் த மேட்ச் விருதினை 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷைகா இஷ்க் தட்டிச்சென்றார். இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 6 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

Exit mobile version