மகளிர் ப்ரீமியர் லீக்கின் 18 வது ஆட்டமானது நேற்று நடைபெற்றது. இந்தப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி மும்பையை பேட்டிங் செய்ய பணித்தது. அதனடிப்படையில் களமிறங்கிய மும்பை அணி பெரிதாக ரன்கள் எதுவும் அடிக்காமல் ஏமாற்றியது. கேப்டன் ஹர்ப்ரீத் கவுர் 23 ரன்கள், பூஜா வஸ்ட்ரகர் 26, இஸ்ஸி வாங் 23, அமஞ்சோட் கவுர் 19 ஆகியோர்களே ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும்படியான ரன்களை எடுக்கவில்லை. இருபது ஓவர் முடிவில் எட்டு விக்கெட்டுகளுக்கு 109 ரன்கள் மட்டுமே மும்பை அணியால் எடுக்க முடிந்தது. டெல்லி சார்பாக மேரிசன் கப், ஜெஸ் ஜோன்சன், ஷிகா பண்டே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
பிறகு பேட்டிங்கிற்கு களம் இறங்கிய டெல்லி அணி ஒரு விக்கெட்டினை இழந்து ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலக்கை எளிதில் எட்டியது. ஷவாலி வர்மா 33 ரன்கள் எடுத்து விக்கெட்டினை இழக்க, கேப்டன் மேக் லென்னிங்க் 32 ரன்னும் ஆலிஸ் கேப்சி அதிரடியாக விளையாடி 6 சிக்சர்களும் 1 பவுண்டரியும் அடித்து 37 ரன்னும் அடித்து களத்தில் நின்று வெற்றிக்கு வழி கோலினர். ப்ளேயர் ஆப் த மேட்ச் மேரிசன் கப் பெற்று சென்றார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் மும்பையைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்திற்கு சென்றது.