இந்தியாவில் ஆடவர் ஐபிஎல் போட்டிகள் போன்று மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகிறது. இந்தப் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளன. நேற்றைய ஆட்டத்தில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மொதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே சோபிக்கவில்லை. அதிக பட்சமாக கிம் கர்த் 32 ரன்கள் எடுத்து நாட் அவுட்டில் இறுதிவரை இருந்தார். ஜார்ஜியா வேர்ஹம் 22, தியோல் 20 ஆகியோர் மட்டுமே ஓரளவு ரன்கள் எடுத்திருந்தனர். மற்றவர்கள் யாருமே பெரிதும் சோபிக்காததால் ரன்கள் எதுவும் பெரிதாக வரவில்லை. டெல்லி அணி சார்பில் மேரிசென்னி கப் 5 விக்கெட்டுகள் எடுத்தார். இவர்தான் மகளிர் ப்ரீமியர் லீக்கில் முதல் ஐந்து விக்கெட்டினை வீழ்த்தியவர் என்கிற பெருமையைப் பெறுகிறார்.
இருபது ஓவர் முடிவில் 105 ரன்கள் எடுத்து ஒன்பது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது குஜராத். 106 ரன்கள் என்கிற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஓபனிங்க் பார்ட்டனர்களான மேக் லென்னிங்கும் ஷாவாலி வர்மாவும் இறங்கினர். இதில் ஷவாலி வர்மா அதிரடியாக ஆடினார். ஷவாலி வர்மா 28 பந்துகளில் 5 சிக்ச்ரகள் பத்து பவுண்டரிகளை சிதறவிட்டு 76 ரன்கள் சேர்த்தார். மேக் லென்னிங் அவருக்கு உறுதுணையாக விக்கெட்டினை விடாமல் ஆடினார். அவர் 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். எட்டாவது ஓவரின் முதல் பந்திலேயே 107 ரன்கள் அடித்து ஆட்டத்தை முடித்துவிட்டது டெல்லி அணி. ஷாவலி வர்மா 19 பந்துகளில் ஐம்பது ரன்கள் அடித்தார். இது இந்தத் தொடரின் இரண்டாவது அதிவேக அரை சதமாகும். இந்தப் போட்டியின் ப்ளேயர் ஆஃப் த மேட்சினை மேரிசென்னி கப் பெற்றார்.