71 ஆயிரம் ரயில் பெட்டிகளை தயாரித்து உலகிலேயே முதல் ரயில் பெட்டி தொழிற்சாலையாக, பெரம்பூர் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை விளங்குவதாக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வந்தே பாரத் ரயில் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
விமானத்தில் பயணிப்பவர்கள், தற்போது வந்தே பாரத் ரயிலில் பயணிக்கிறார்கள் – ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்.
பெரம்பூர் ரயில்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் 25 வது வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் பணியினைப்பார்வையிட்டு, ரயில்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாரட்டுத் தெரிவித்த தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழ்நாடு ரயில்வே துறையின் கடுமையான முயற்சியால் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், வந்தே பாரத் ரயிலில் மக்கள் விருப்பத்துடன் பயணிப்பதாகவும் தெரிவித்தார். விமானத்தில் பயணிப்போது போன்ற உணர்வுடன் அனைத்து வசதிகளுடன் பயணிப்பதாகவும், இந்த ரயில் பெட்டிகளை தயாரித்த ரயில்வே துறை அதிகாரிகளை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
71,000 ரயில் பெட்டிகள் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டிருபபதாகவும், உலகிலேயே அதிகமாக ரயில் பெட்டிகள் தயாரித்த நிறுவனம் என்ற பெயரை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை பெற்றிருக்கிறது. இது தமிழகத்துக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை. இங்கு தயாரிக்கப்படும் ரயில்பெட்டிகள், ஸ்ரீலங்கா, நேபால் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆவதாக தெரிவித்தார்.
Discussion about this post