375 வருடங்களாக கண்காணிப்பிற்கும் ஆய்வுகளுக்கும் பிறகு தற்போது உலகின் எட்டாவது கண்டமான சீலேண்டியா(Zealandia) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீலேண்டியா (zealandia) :
சீலேண்டியா கண்டமானது முதன்முதலில் கோண்ட்வானா கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. சுமார் 105 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கோண்ட்வானா கண்டத்தில் இருந்து நகரத் துவங்கியது. இது 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு அண்டார்டிகா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்துள்ளது. இந்த கண்டமானது சுமார் 1.89 மில்லியன் சதுர கிலோ மீட்டர் ஆகும். சீலேண்டியா பற்றி முதன் முதலில் 1672 ஆம் ஆண்டு தான் சில தகவல்கள் பதியப்பட்டும் ஆய்வுக்கு உட்பட்டும் வந்தது. இப்படி ஒரு கண்டம் இருப்பதை அறிவியலாளர்கள் 375 வருடங்களாக ஆய்வு செய்து தற்போது அக்கண்டம் இருப்பது உண்மைதான் என்பதை நிரூபித்துள்ளார்கள். இந்தப் புதிய கண்டமானது 6560 அடி கடல் மட்டத்தில் ஆழத்தில் அமைந்துள்ளது. தற்போது சீலெண்டியா உலகின் எட்டாவது கண்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post