இன்று உலக வனவிலங்கு தினம்..ஐம்பது ஆண்டுகள் நிறைவு!

இன்று உலகம் முழுவது வனவிலங்குகள் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பூமியானது மனிதர்களுக்கானது மட்டுமில்லை, மேலும் பல உயிரினங்களுக்காகவும் தான் என்பதை பறைசாற்றும் விதமாக இந்த தினமானது ஆண்டுதோறும் மார்ச் 3ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் உலக வனவிலங்கு தினம் “வனவிலங்கு பாதுகாப்புக்கான கூட்டாண்மை” Partnerships for wildlife conservation என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகிறது.World Wildlife day: உலக வனவிலங்கு தினம் 2022! அழியும் நிலையில் இருக்கும்  வனவிலங்குகள்! பாதுகாப்போம் வாருங்கள்!

1973 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி அழிந்து வரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கான சர்வதேச வர்த்தகத்திற்கான மாநாடு(cites) ஒன்று நடைபெற்றது. சர்வதேச வர்த்தகத்தின் நோக்கம் என்னவென்றால் அழிந்துவரும் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களை யாரும் அச்சுறுத்தாமல் இருப்பதற்கு வழிவகை செய்வதாகும். மார்ச் 16, 2013 அன்று, CITES (CoP16) உறுப்பினர்கள் மாநாட்டின் 16வது கூட்டம் பாங்காக்கில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது தாய்லாந்து மார்ச் 3ஆம் தேதியை உலக வனவிலங்கு தினமாகக் குறிக்கும் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 20, 2013 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு மார்ச் 3ஆம் நாளை அதிகாரப்பூர்வ வனவிலங்கு தினமாக அறிவித்தது.

Exit mobile version