இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது நாளை மறுநாள் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு ஆயத்தமாவதன் பொருட்டு இந்திய வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியானது நியூஸிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது.
தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டியில் வெற்றிபெறுமா? என்கிற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விசயம் என்னவென்றால், ரோகித் சர்மா தான் விளையாடிய இறுதிப்போட்டிகளில் தோல்வி அடைந்ததே இல்லை. டி20, ஒருநாள், ஐபிஎல் என்று தான் சந்தித்த அனைத்து இறுதிப்போட்டிகளிலும் ரோகித் சர்மா கோப்பையை வென்றுள்ளார்.
எதிர் நின்று ஆடும் ஆஸ்திரேலியா அணியினைப் பொறுத்தவரை, டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவிற்கு இணையாக இருக்கிறது. கிரிக்கெட்டினை தன் தேசிய விளையாட்டாக கொண்ட ஆஸ்திரேலிய அணி இந்த இறுதிப்போட்டியில் முடிந்தமட்டிற்கு இந்திய அணியை வெல்லவே பார்க்கும். ஐந்து ஒருநாள் உலகக்கோப்பைகள், ஒரு டி20 உலகக்கோப்பைகள் என்று கிரிக்கெட்டில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டி எழுப்பி வைத்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி விவரம் : டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், லபுசேஞ்ச், ஸ்டீவன் ஸ்மித், மேட் ரென்ஷா, டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, கேமரூன் க்ரீன், மிட்செல் மார்ஸ், பேட் கம்மின்ஸ்(கேப்டன்), அலெக்ஸ் ஹேரி, ஜோஸ் இங்க்லிஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட், டோட் மர்பி.
இந்திய அணி விவரம் : சுப்மன் கில், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, புஜாரா, ஜடேஜா, சிராஜ், சூர்யகுமார், யெஸ்ஹஸ்வி ஜெஸ்வால், அக்சர் படேல், அஸ்வின், இஷான் கிஷன், ஸ்ரீகர் பரத், உதன்கட், முகேஷ் குமார், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட்.
Discussion about this post