உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – தேதி அறிவிப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டிக்கான தேதியை அறிவித்தது ஐசிசி. வருகின்ற ஜூன் மாதம் 7 ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தில் உள்ள அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும். முதல் இடத்தில் தற்போது ஆஸ்திரேலியா அணி உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. தற்போது இந்தியா ஆஸ்திரேலியாவிடையே நடக்கும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் கோப்பைப் போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றாக வேண்டும். மூன்றாவது இடத்தில் இலங்கையும் நான்காவது இடத்தில் தென்னாப்பிரிக்காவும் உள்ளது. இலங்கைக்கு நியூசிலாந்துடனும், தென்னாப்பிரிக்காவிற்கு வெஸ்ட் இண்டீசுடன் டெஸ்ட் தொடர்கள் உள்ளது. இந்த அணிகளின் வெற்றித் தோல்வியும் இந்திய அணியின் புள்ளிப்பட்டியல் இடத்தினை பாதிக்க வாய்ப்பு உண்டு.

Exit mobile version