உலக பத்திரிகை சுதந்திர தினம் இன்று!

மக்களாட்சியைத் தாங்கும் நான்கு தூண்களில் ஒன்றாக விளங்குவது பத்திரிகை. உலக பத்திரிகை சுதந்திர தினம் மே 3-ஆம் நாளான இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

எப்போதுமே பத்திரிகையாளர்கள் தான் பெரும்பாலான நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மக்கள் பிரதிநிதிகளாகவே செயலாற்றி வருகின்றனர். பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் வகையில் உலக பத்திரிகை சுதந்திர நாள் “மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவு படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பத்திரிகையாளர் வழங்கும் * ‘செய்தி’ என்பதை ஆங்கிலத்தில் ‘News’ என்கிறோம். அதைக் குறிக்கும் விதமாக North, East,West,South என்னும் சொற்களின் முதல் எழுத்துகள் இணைந்துதான் ‘நியூஸ்’.

நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகம், பத்திரிகைத் துறை தான் மக்களாட்சியைத் தாங்கும் நான்கு தூண்களாக விளங்குகிறது. இதில் பத்திரிகைத் துறையே பல காலமாக அடக்குமுறைகளைச் சந்தித்து வந்துள்ளது. தற்போதும் கூட. மக்களின் கல்வியறிவு வளர்ச்சி பெற்றதன் அடையாளமாகவே பத்திரிகைகள் உருவாகின. உலகின் எந்தத் திசையில் என்ன நிகழ்கிறது என்ற தகவலை அறியவும், அரசுகள் செய்யும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் இந்தப் பத்திரிகைகள் தான் பெரிய அளவு உதவுகின்றன.

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட தற்போதைய சூழலில், சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமூக ஊடகங்களின் வரவால் செய்திகள் எல்லோருக்கும், எப்போதும் என்பது சாத்தியமாகி விட்டது. அதேநேரத்தில், பொய் செய்திகள் பெருகவும், போலி செய்தியாளர்கள் அதிகரிக்கவும் காரணமாகவும் அமைந்திருப்பதை தவிர்க்க முடியவில்லை.

பத்திரிக்கையாளர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பிரான்சை நாட்டை சேர்ந்த எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு சர்வதேச அளவில் ஆய்வு ஒன்றை நடத்தியது. பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடத்திய ஆய்வில் இந்தியா அதில் பின்தங்கியே இருந்தது. என்ன தான் நாம் பத்திரிகையாளர்கள் சுதந்திரத்தை பற்றி பெருமையாக பேசினாலும். இன்றும் பல மாநிலங்களில் ஆளும் கட்சிகள் பத்திரிகைகளை விலைக்கு வாங்குவதும், மிரட்டல் விடுத்து தன் வசத்திற்கு கொண்டு வருவதும், ஆளும் கட்சி செய்கின்ற தவறுகளை மட்டும் பத்திரிகைகளில் வெளிவராமல் பல அடக்குமுறைகளை கையாண்டு கொண்டு தான் இருக்கிறது.

அடிக்க அடிக்க பந்து துள்ளி எழுவதுபோல இந்த அடக்குமுறைகளைச் சந்தித்து பத்திரிகைத் துறை எழுச்சி பெற்றதே தவிர ஒரு நாளும் சோர்ந்து போய்விடவில்லை. அதே போல நேர்மை தவறாமல் சில பத்திரிகைகளும் செயல்பட்டுகொண்டு தான் இருக்கிறது. கத்தி முனையைவிடவும் பேனா முனையே வலிமையானது என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர். உள்ளூர் முதல் உலக நிகழ்வுகளை உண்மை நிலையில் இருந்து தவறாமல், யாருக்கும் அஞ்சாமல் மக்களுக்கு வழங்குவதே பத்திரிகை. இவை சுதந்திரமாக செயல்பட்டால் தான்,உண்மை நீடிக்கும். பத்திரிகை சுதந்திரத்தை காப்பது, பத்திரிகையாளர் மீதான தாக்குதலை தடுக்கும்.

– ராஜா சத்யநாராயணண், செய்தியாளர்.

Exit mobile version