உலக “PI” தினம் இன்று கொண்டாடப்படுகிறது…!

கணிதத்தில் PI மிகவும் முக்கியமான குறியீடு ஆகும். இதன் உண்மையான மதிப்பு 22/7 என்றும், 3.14 என்றும் சொல்லப்படுகிறது. கணித மேதை வில்லியம் ஜோன்ஸ் என்பவர் தற்போது நாம் பை என்பதற்கு பயன்படுத்தும் குறியீடை 1706 ஆம் ஆண்டு உருவாக்கினார். இன்றைக்கு ஏன் பை தினம் கொண்டாடப்படுகிறது என்றால், அமெரிக்க தேதி முறையில் 3.14 என்பது மார்ச் 14 ஆகும். எனவே ஆண்டு தோறும் இந்த தினம் இன்றைய நாளில் கொண்டாடப்படுகிறது.  1988 ஆம் ஆண்டிலிருந்து இந்த தினம் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. மேலும் இன்றைய தினம் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்ததினமாகும்.

Exit mobile version