உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. 2-வது நாளான இன்று 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின. சி.பி.சி.எல். நிறுவனம் 27 ஆயிரத்துக்கு 400 கோடி ரூபாய்க்கும், அதானி குழுமம் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும், என்.எல்.சி. நிறுவனம் 23 ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் முதலீட்டு செய்ய முன் வந்துள்ளன.
அதேபோன்று, எம்.ஆர்.எஃப் நிறுவனம் மூவாயிரத்து 100 கோடி ரூபாய்க்கும், சாய் பல்கலைக்கழகம் 580 கோடி ரூபாய்க்கும், ஹுண்டாய் கார் நிறுவனம் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கும், அலையன்ஸ் நிறுவனம் 9 ஆயிரத்து 488 கோடி ரூபாய்க்கும், ஏசர் நிறுவனம் ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும், பி.எஸ்.ஏ. நிறுவனம் ஆயிரத்து 250 கோடி ரூபாய்க்கும் முதலீடு செய்ய முன் வந்துள்ளன.