உலகம் முழுவதும் உள்ள மக்களாகிய நாம் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்றிணைகிறோம் என்றால், அது நுகர்வோர் என்கிற விதத்தில் தான். நாம் நமது வாழ்வில் தினசரி ஒரு பொருளை வாங்கும் நுகர்வோராகவே இருக்கிறோம். அது உணவு, உடை, அத்தியாவசியப் பொருட்கள் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், நாம் ஒரு நுகர்வு கலாச்சாரத்தில் இருக்கிறோம் என்பதே உண்மை. அப்படிப்பட்ட நுகர்வோராகிய நாம் எதேனும் சில அல்லது பல வகைகளில் கூட ஏமாற்றம் அடைகிறோம். அதையெல்லாம் சரிசெய்ய நமக்கென்று சில அடிப்படை உரிமைகள் தேவைப்படுகிறது. அதனைக் கருத்தில் கொண்டுதான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டமானது இந்தியாவில் 1983 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி இயற்றப்பட்டது. ஆனால் இதற்கெல்லாம் முன்பே 1960 ஏப்ரல் 1 ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பானது உருவாக்கப்பட்டது. அதில் 120 நாடுகளைச் சேர்ந்த 250 உறுப்பினர்கள் பங்குபெற்றனர். பிறகு சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து 1983 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதியில் நுகர்வோர் தினம் உருவாக்கப்பட்டது. சந்தையின் எஜமானர் நுகர்வோர் தான்.
Discussion about this post