அழியும் நிலையில் உள்ள ஜமுக்காளம் தொழில்

ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற ஜமுக்காளத் தொழிலை காக்க மத்திய, மாநில அரசுகள் தொழில்நுட்ப கல்லூரி அமைக்க வேண்டுமென உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பவானியில் கைத்தறி நெசவாளர்களால் தயாரிக்கப்படும் ஜமுக்காளம் உலக அளவில் பிரசித்தி பெற்றது. பவானி ஜமுக்காள நகரம் என்று அழைக்கப்படும் அளவில் இந்தத் தொழில் பாரம்பரியம் மிக்கதாக விளங்குகிறது.

முற்றிலும் கைத்தறி நெசவாளர்கள் மட்டுமே ஈடுபட்டுள்ள இந்தத் தொழிலில் பவானி மட்டுமின்றி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் ஈரோட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

விற்பனை குறைந்து விட்டதால், ஜமுக்காள தயாரிப்பும் பாதிக்கப்பட்டு இருப்பதாக நெசவாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். அழியும் நிலையில் உள்ள இந்த தொழிலை காக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Exit mobile version