குன்னூர் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் குட்டிகளுடன் கரடி உலா வந்ததைக் கண்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் பகுதியில் கரடி ஒன்று குட்டிகளுடன் தேயிலைத் தோட்டத்தில் உலா வந்ததைக் கண்ட தொழிலாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் தீ பந்தங்களுடன் கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். கரடிகளால் அச்சம் ஏற்பட்டுள்ளதால் வனத்துறையினர் அவற்றை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post