பணி நிமித்தமாக சென்னை திரும்பும் தொழிலாளர்கள், அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மூலம் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டல், இலவச கொரோனா தனிமைபடுத்துதல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் , சென்னைக்கு வருவதற்கான இ-பாஸ் வழங்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார். பிற மாவட்டங்களில் இருந்து பணி நிமித்தமாக சென்னைக்கு வரும் தொழிலாளர்கள் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மூலம் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார். முறையான ஆவணங்கள் இருந்தால் இ-பாஸ் வழங்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கமளித்தார்.
Discussion about this post