ஆண்டிப்பட்டியில் துணிக்கடை ஒன்றில் நைட்டிகள் திருடிய பெண்ணை சிசிடி காட்சியை வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள துணிக்கடையில் நேற்று முன்தினம், சரஸ்வதி என்பவர் பணியில் இருந்த போது, அங்கு வந்த மூன்று பெண்கள் துணி வாங்க வந்துள்ளனர். சரஸ்வதி துணிகளை எடுக்கும் போது 12 புது நைட்டிகளை திருடிச் சென்றதாக தெரிகிறது. பின்னர் துணிகள் குறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது அந்த முன்று பெண்களும் திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை வைத்து, கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி சென்ற காவல்துறையினர், செல்வி என்ற பெண்ணை கைது செய்தனர். ஈஸ்வரி, அங்கீஸ்வரி ஆகிய இரண்டு பெண்கள் தப்பிவிட்டனர். இந்த மூன்று பெண்கள் மீது சின்னமனூர் காவல்நிலையத்தில் திருட்டு வழக்குகள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Discussion about this post