சச்சினின் எண்ணத்தை சிதைத்த பெண்கள்..

கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் செய்யாத சாதனைகள் இல்லை. கிரவுண்டில் மட்டுமல்ல நிஜத்திலும் மற்றவர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்து தன் மீது உள்ள போலியான பிம்பத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடுவார். அதனால்தான் அவர் இன்றளவும் கொண்டாடப்படுகிறார்.

இந்நிலையில் நேற்றைய தினம் தனது டிவிட்டர் பக்கத்தில் சச்சின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இரு பெண்கள் அவருக்கு ஷேவ் செய்வது போன்ற காட்சிகள் இருந்தது.

மேலும் அந்த பதிவில் சச்சின், ” உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை..ஆனால் வேறு யாரோ ஒருவர் ஷேவ் செய்வது எனக்கு இதுதான் முதல் முறை என்றும், இதுநாள் வரை இருந்த சாதனையை சிதைத்து விட்டனர் என்றும் அந்த பெண்களை புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார். இந்த சிகை திருத்தும் பெண்களை சந்தித்தது மிகப்பெரிய கெளவரம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் கனவுகளுக்கு வேற்றுமை இல்லை என்ற ஹேஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த போட்டோ ட்ரெண்டாகி வருகிறது.

Exit mobile version