கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கிராமிய பாடல்களை பாடிகொண்டு நாற்று நடும் பணி உற்சாகமாக நடந்து வருகிறது.
வேலை செய்யும் போது களைப்பு தெரியாமல் இருக்கவும், மன மகிழ்ச்சிக்காகவும் நாற்று நடவின் போது நாட்டுப்புறப் பெண்களால் காலங்காலமாக இவ்வகை பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. பெண் கடவுளை வணங்கி நடவு தொழிலை தொடங்கும் இவர்கள், விநாயகர், முருகர், மாரியம்மன், எல்லையம்மன், ஐயனார் போன்ற தெய்வங்களை வாழ்த்தி பாடுகின்றனர். இந்த கிராமிய பாடல்களுக்கு தற்போது வரவேற்பு அதிகரித்துள்ளது. இவை சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.