விடியா திமுக ஆட்சியில், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில், அதிமுக மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அப்போது சிறப்பு அழைப்பாளராக வந்த கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் வெண் புறாக்களை பறக்க விட்டார்தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், அங்கே வைத்திருந்த புரட்சித் தலைவியின் திருவுருவ படத்திற்கு முன்னாள் முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக அங்கே வைத்திருத்த கேக்கை வெட்டிய கழக இடைக்கால பொதுச் செயலாளர், மகளிரணி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.இதனைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஏராளமான பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தார்.பின்னர் ஏழை எளியவர்களுக்கு கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அன்னதானம் வழங்கினார்.புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவியின் ஆட்சி காலத்தில் பெண்களுக்கு இருந்த பாதுகாப்பு, தற்போது விடியா திமுக ஆட்சியில், வீதியில் பெண்கள் நடமாட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டினார்.
மேலும் புரட்சித் தலைவி அறிவித்த வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களில் ஒன்றான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தால் பல பெண்கள் பயனடைந்தார்கள். ஆனால் இந்த விடியா திமுக அரசு பல காரணங்களை சொல்லி அந்த திட்டத்தை நிறுத்தி விட்டார்கள் என முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினார்.தாய்மைக்கு இலக்கணாமாய் திகழும் பெண்கள், தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும், வாழ்வில் சந்திக்கும் சோதனைகளை உறுதி கொண்டு அவற்றை வெற்றிப்படிகளாக்கி, சரித்திரம் படத்திட வேண்டும் என முன்னால் முதல்வர் மகளிர் வாழ்த்து தெரிவித்தார்.