பெண் அதிகாரிகளுக்கு பாலியல் தொல்லை – MP சி.வி சண்முகம் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்தது குறித்து விவாதிக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்பி சி.வி.சண்முகம் நோட்டீஸ் வழங்கியுள்ளார். அந்த நோட்டீஸில், கரூரில் செந்தில் பாலாஜியின் சகோதரரின் இல்லத்தில் சோதனைக்காக சென்ற பெண் வருமான வரித்துறை அதிகாரி உள்பட பலர் தாக்கப்பட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர் என குறிப்பிட்டுள்ள அதிமுக எம்பி சி.வி.சண்முகம், மத்திய அரசு ஊழியர்கள் மீதான சமீபத்திய தாக்குதல், அச்சமின்றி வேலை செய்ய முடியாது என அவர்களை நினைக்க வைத்துள்ளதாகவும், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என அதிமுக எம்பி சி.வி.சண்முகம் நோட்டீஸ் வழங்கி வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version