பாகிஸ்தானை சேர்ந்த ராஷிடா பிபி என்ற பெண்ணிற்கு வயது 50. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . பின்பு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஷிடா இறந்து விட்டதாக தெரிவித்து அதற்கான சான்றிதழையும் வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து ராஷிடா இறுதி சடங்கிற்காக வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இறுதிச் சடங்கின்போது ராஷிடாவின் கை, கால்கள் அசைவதை பெண்ணொருவர் கவனித்துள்ளார்.பின்பு உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இறந்ததாக கூறிய பெண் உயிர் பிழைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.