வால்பாறை அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேயிலை தோட்டத்தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், வால்பாறை கருமலை எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டத்தொழிலாளியாக பணியாற்றிவரும் ரூபன், அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி, வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அதேபோன்று தவறாக நடந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி, இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவே, அதிர்ச்சியடைந்த அவர்கள் பொள்ளாச்சியில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய தீவிர தேடுதலில் தலைமறைவாக இருந்த ரூபன் பிடிபட்டார். பின் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Discussion about this post