ஹூக்ளி மாவட்டம் பெல்தியா கிராமத்தைச் சேர்ந்த அனிமா சக்ரவர்த்தி என்ற மூதாட்டி, வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். வேலை செய்யும் இடங்களில் கிடைக்கும் உணவை பிள்ளைகளுக்கு கொடுத்து வந்துள்ளார். மேலும், தனது பசியைப் போக்க தேநீர் மற்றும் பிற பானங்களை மட்டும் அருந்தி வந்துள்ளார். நாளடைவில் அவரது உணவுப் பழக்கம் தேநீரும் மற்றும் சத்து பானங்கள் என அமைந்துவிட்டது. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக அவர் திட உணவுகள் எதுவும் உட்கொள்ளாமல், நல்ல ஆரோக்கித்துடன் இருந்து வருகிறார். இதுகுறித்து ஆராய்ந்த மருத்துவர்கள், திட உணவுதான் எடுக்கவேண்டும் என்பது அவசியம் இல்லை, திரவ வடிவிலும் உடலுக்குத் தேவையான ஊட்டம் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர்.
Discussion about this post