30 அடி ஆழ கிணற்றில் தவறிவிழுந்த பெண்-காப்பாற்றிய தீயணைப்புத் துறை

30 அடி ஆழ கிணற்றில் தவறிவிழுந்த பெண்ணை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

சென்னை தாம்பரம் அடுத்த மேற்கு தாம்பரம் திருநீர்மலை சாலையில் வசித்து வருபவர் மைதிலி. இவர் இன்று காலை துணி உணர்த்திக் கொண்டு இருந்த பொழுது, அருகே இருந்த 30 அடி ஆழ கிணற்றில் கால் இடரி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனே விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்பு துறையினர், கிணற்றுக்குள் உயிருக்கு போராடிய நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த, மைதிலியை கயிறு மூலம் கட்டி மேலே இழுத்து உயிருடன் மீட்டனர். இதனைத் தொடர்ந்து, கால் முறிவு ஏற்பட்ட அவர், தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version