நாடாளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்டமன்ற தேர்தலையும் நடத்த மத்தய அரசு திட்டம்?

ஒரே தேசம் ஒரே தேர்தல் என்ற திட்டத்தை மத்திய பாஜக அரசு வலியுறுத்தி வருகிறது.  தேர்தலுக்கான செலவினங்களை குறைக்கவும், நலத்திட்டப் பணிகள் முடங்காமல் இருக்கவும் இம்முறை செயல்படுத்தப்படுவதாக பா.ஜ.க குறிப்பிட்டுள்ளது.  இந்நிலையில் 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலுடன் சேர்த்து 11 மாநில சட்டப்பேரவை தேர்தல்களை நடத்த பா.ஜ.க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை பதவி காலம் நிறைவடைய உள்ள சில மாநிலங்கள் உள்பட 11 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல்களை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Exit mobile version