மக்களவை தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி, மே 19-ந் தேதி வரையில் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது.இன்று நாடு முழுவதும் வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது.வாக்கு எண்ணப்பட்ட சில நேரங்களில் இருந்தே தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வந்தது.தற்போதைய நிலவரப்படி பாஜக 349 இடங்களிலும், காங்கிரஸ் 91 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் 5,71,154 வாக்குகள் பெற்று பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.தற்போது இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் உலக தலைவர்கள் பலரும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இஸ்ரேல்,இலங்கை பிரதமர்கள் மற்றும் மாலத்தீவு அதிபர்,சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் மோடிஜிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமே உள்ளது.அருண் ஜெட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் “நாட்டின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் தலைவரையும், மக்களுக்காக அயராது உழைக்கும் தலைவரையும் இந்தியா விரும்புகிறது.அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்.ஜெய் ஹிந்த்.” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கிரிக்கெட் வீரரும்,பாஜக வேட்பாளருமான கௌதம் காம்பீர் “இந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தனது புகழை இழந்துவிட்டார்.மத்தியில் தாமரை மலர்ந்தே இருக்கும்” என கூறியுள்ளார்.
மேலும் தமிழ் திரைப்பட நடிகர்கள் ரஜினிகாந்த், விஷால் உள்ளிட்ட பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
Respected dear @narendramodi ji
hearty congratulations … You made it !!! God bless.— Rajinikanth (@rajinikanth) May 23, 2019
Congratulations to our hon PM @narendramodi ji and the Bjp party for the massive n landslide victory in Loksabha https://t.co/HX2WOOUXvK
— Vishal (@VishalKOfficial) May 23, 2019
Discussion about this post