உங்களால் கரப்பான் பூச்சியுடன் செல்ஃபி எடுக்க முடியுமா? -வைரலாகும் புது சேலஞ்ச்

சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் ட்ரெண்டாகும் விஷயங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதில் ஆச்சிரியப்பட வைக்கும் சில சேலஞ்ச் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அந்த சேலஞ்ச் என்னவென்றால் ஒரு கரப்பான் பூச்சியை முகத்தின் மேல் போட்டு செல்ஃபி எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்ற வேண்டும்.

இந்த சேலஞ்சை முதன் முதலில் ஆரம்பித்தது அலெக்ஸ் அங்( Alex Aung ) என்ற பையன் .தனது பேஸ்புக்கில் கரப்பான் பூச்சியுடன் செல்பி எடுத்து அதனை பதிவேற்றி இதே போன்று உங்களால் செய்ய முடியுமா என கேள்வியும் எழுப்பியுள்ளான்.

அதனைத் தொடர்ந்து மற்றவர்களும் மனிதர்களுடன் செல்பி எடுப்பது போல் அசால்ட் ஆக கரப்பான்களுடன் செல்பி எடுத்து பதிவேற்றமும் செய்துள்ளனர்.இந்த சேலஞ்ச் ஆனது 18,000 ஷேர், 500 கமெண்ட், 5700 லைக்-களையும் பெற்றுள்ளது.

Exit mobile version