அதிமுக ஆட்சியில் ஏழை பெண்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்ட திருமண நிதியுதவி திட்டத்தை முடக்கும் வகையில், திமுக அரசு பல்வேறு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. இதனால், தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளதால் ஏழை மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஏழை பெண்களின் திருமணத்திற்க்கு உதவும் வகையில், தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் திட்டத்தை மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதன்படி நிதியுதவியாக 25ஆயிரம் மற்றும் 50ஆயிரம் ரூபாயும், 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் பல லட்சம் ஏழை பெண்கள் இந்த திட்டத்தில் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில், அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட திருமண நிதியுதவி திட்டத்தை முடக்கும் வகையில் திமுக அரசு புதிய நிபந்தனைகளை விதித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி மண்டபங்களில் திருமணம் நடத்தினால், தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாடி வீடு, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருந்தாலும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தாலும் தாலிக்கு தங்கம், நிதியுதவி வழங்கப்படாது. திமுக அரசின் பல்வேறு புதிய நிபந்தனைகளால் தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளதால் ஏழை மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Discussion about this post