ஈரோட்டை அடுத்த ஆசனூர் வனப்பகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த ஆசனூர் வனப்பகுதி வழியாக செல்லும் நெடுஞ்சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.வனப்பகுதியில் தற்பொழுது பரவலாக சாரல் மழை பெய்து வருவதன் காரணமாக, வனப்பகுதியில் குளிர்ச்சி நிலவி வருவதால் யானைகள் கூட்டம் கூட்டமாக தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் முகாமிட்டுள்ளன.மாலை நேரங்களில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுகின்றன.
இதனால் சில சமயங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இந்த நிலையில், வனப்பகுதி வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் வேன்,லாரி ஓட்டுனர்கள் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். யானைகள் கூட்டமாக இருக்கும் போது கூச்சலிடுவதையும், போட்டோ,வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Discussion about this post