கடும் பனி பொழிவு காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்திற்குப்பட்ட பகுதிகளில் உள்ள வன விலங்குகள் உணவு தேடி சாலைக்கு வர தொடங்கியுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் உறைபனி நிலவுவதால், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார வனப் பகுதிகளில் கடும் குளிர் காணப்படுகிறது.
பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருப்பதால், முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, மாயார், வாழைத்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள வனப்பகுதிகளில் நீர் நிலைகள் மட்டுமன்றி புல்வெளிகள் கருகி காணப்படுகிறது.
இதன் காரணமாக, யானை, மான், சிங்கவால் குரங்குகள் ஆகிய வனவிலங்குகள் உணவு தேடி சாலையோரம் உலா வருகின்றன. வன விலங்குகளுக்கு இடையூறு செய்யாமல் பயணிக்க வாகன ஓட்டிகளுக்கு வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Discussion about this post