மனிதன் முன்னேறியதால் தொழில்நுட்பம் வளர்ந்ததா, இல்லை தொழில்நுட்பம் வளர்ந்ததால் மனிதன் முன்னேறினானா என்று கேட்டால் நமக்கு பதில் தெரியாது. ஆனால், அன்றாட வாழ்க்கையில் தொழிநுட்பம் இல்லாமல் நாம் இயங்குவதே கடினம் என்ற நிலைமையில் தள்ளப்பட்டு இருக்கிறோம்,ஆயினும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நமக்கு பல வழிகளில் நன்மையே தருகிறது. வளர்ச்சி என்பது வானத்தை எட்டும் அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த கண்டுபிடிப்பும் நம்மை சற்று வியக்க வைக்கிறது.அவற்றை பற்றி கீழே காண்போம்.
வெடிகுண்டு மிரட்டல் என்பது ஒன்றும் நமக்கு புதுசல்ல.. பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ அல்லது பொதுமக்கள் அதிமாக நடமாடும் பகுதிகளிலோ வெடிகுண்டுகளை வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வரும், அதன் பேரில் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து அங்கு இருக்கும் மக்களை அப்புறப்படுத்தி அவர்களின் உதவியோடு பொருட்களை ஸ்கேனிங் செய்து மட்டுமே வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க இயலும்.தற்போது சற்றே ஒரு படி மேலே சென்று, அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைகழகமும், கனடாவின் நியூ பிரன்ஸ்விக் பல்கலைகழகமும் சேர்ந்து நடத்திய ஆய்வில் wifi அல்லது கம்பியில்லா சிக்னல்கள் மூலம் உலோகத்தால் செய்யப்பட்ட துப்பாக்கிகள், அலுமினிய கேன்கள், பேட்டரிகள்,வெடிகுண்டுகள் போன்ற அபாயம் விளைவிக்கும் பொருட்களை wifi மூலம் கண்டறிய முடியும் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அமிலம் ,ஆல்கஹால்,தண்ணீர் போன்ற திரவ வடிவிலான இரசாயன பொருட்களின் அளவையும் இந்த wifi சிக்னல் மூலம் கண்டுபிடிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.
இந்த wifi அமைப்பினை நிறுவுவதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டெனாக்களை கொண்ட wifi சாதனம் தேவைப்படும் என்றும், wifi-யிலிரிருந்து வெளிவரும் அலைகள் பொருட்களின் மீது பட்டுவிட்டு மீண்டும் wifi சாதனத்திற்கு செல்வதன் மூலம் இதனை பகுப்பாய்வு செய்வது சாத்தியம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
Discussion about this post