சோஹோ நிறுவனத்தின் சிஇஓ மீது அவரது மனைவி கூறியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான சோஹோ நிறுவனத்தின் சி.இ.ஒ-வாக உள்ளார் ஸ்ரீதர் வேம்பு. இவரது மனைவி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதில் ஆட்டிசம் குறைபாடு உடைய மகனையும், தன்னையும் 2020ம் ஆண்டு நிர்கதியாக விட்டுச் சென்றுவிட்டதாகவும், தனது சொத்துகளை தனக்கு தெரியாமலேயே, அவரது குடும்பத்தினர் பெயருக்கு மாற்றிவிட்டதாகவும், விவாகரத்துக்கு பிறகு சொத்தில் சரிபாதியை ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்ற நிலையை தவிர்க்வே இவ்வாறு செய்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நிலையில் சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தான் எந்த பங்குகளையும், யாருடைய பெயருக்கும் மாற்றவில்லை என்றும், கனவு திட்டத்தை நினைவாக்க தான் இந்தியா வந்ததாகவும், தனது மனைவி இந்தியாவுக்கு வர மறுத்துவிட்டதாகவும், தனது மனைவி, மகனுக்கு எவ்விதமான நிதியியல் கவலைகளையும் அளிக்கவில்லை எனவும் விளக்கம் கொடுத்துள்ளார்.
Discussion about this post