இன்று அதிகாலை சென்னையின் பல்வேறு பகுதிகளில் சுமார் அரைமணி மிதமான மழை பெய்தது.
சென்னையில் கடந்த சில தினங்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை மழை பெய்தது. தாம்பரம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழையினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது .