திண்டுக்கல், நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், இடியுடன் கூடிய மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், கோடைகாலம் துவங்கியதில் இருந்து கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பழனியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. பழனி, ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது. மழை காரணமாக குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சற்றுவட்டார பகுதிகளான புதுப்பாளையம், பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், சாலையெங்கும் மழைநீர் தேங்கியது. மழை காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது.

சிவகங்கை மற்றும் சற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. நாட்டரசன்கோட்டை, ஒக்கூர், சோழபுரம், மதுகுப்பட்டி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. மழை காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இடையர்பாளையம், கணுவாய், டிவிஎஸ் நகர், வடகோவை, வடவள்ளி, துடியலூர் கவுண்டம்பாளையம், பீளமேடு ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. வெப்ப தாக்கம் காரணமாக பகல் நேரங்களில் வெளியே வர முடியாமல் இருந்த பொதுமக்கள், திடீரென்று பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Exit mobile version