இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 438 ரன்கள் குவித்தது. விராட் கோலி 121, ரோகித் சர்மா 80, ஜெய்ஸ்வால் 57, ரவிச்சந்திரன் அஸ்வின் 56 என்று கணிசமான ரன்கள் அடித்து அணிக்கு வலு சேர்த்தனர்.
தொடர்ந்து விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி நான்காவது நாள் ஆட்ட முவிடில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கிரெய்க் பிராத்வெயில் 75 ரன்களும், அலிக் அத்தனாஸ் 37 ரன்களும் சேர்த்தனர். அந்த அணி தனது கடைசி 6 விக்கெட்டுகளை 47 ரன்களுக்கு தாரை வார்த்தது குறிப்பிடதக்கது. இந்திய அணி சார்பாக முகமது சிராஜ் 5 விக்கெட்களையும், ஜடேஜா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். 183 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி, விரைவாக ரன்கள் சேர்க்கும் முனைப்பில் அதிரடி காட்டி விளையாடத் துவங்கினார்கள். ரொக்கித சர்மா 35 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மூன்று சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் நாலாப் பக்கமும் பறக்கவிட்டார். மறுபுறம் ஜெய்ஸ்வால் நிதானமாக ஆடினாலும் அவரும் அடித்து ஆடி ஆட்டத்தை ஆரம்பித்தார். இந்த ஜோடி 74 பந்துகளில் 100 ரன்களை கடந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 100 ரன்களை எட்டிய அணி என்ற சாதனையை இந்தியா தனதாக்கியது.
இதற்கு முன்னர் 2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற்ற ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி 13.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டியிருந்ததே சாதனையாக கருதப்பட்டது. தற்போது இந்த சாதனையானது இருபத்திரண்டு இரண்டு வருடங்கள் கழித்து முறியடிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆஸ்திரேலியாவின் சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. அதாவது போர்ட் ஆஃப் ஸ்பெயினை பொறுத்தமட்டில் இந்திய அணி 24 ஓவர்களில் 181 ரன்கள் குவித்தது. இதனை 7.54 ரன் ரேட்டிங்கில் இந்திய அணி குவித்தது. இது ஓர் இன்னிங்சில் 20- ஓவர்களில் ஓர் அணி எடுத்த அதிகபட்ச ரன்கள் அகும். இதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்களில் 7.53 ரன் ரேட்டில் 2 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்திருந்ததே சாதனையாக கருதப்பட்டது. இச்சாதனையைத் தான் இந்திய அணி தற்போது முறியடித்துள்ளது. அதேபோல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷான் அதிவேக அரைசதத்தினையும் அடித்திருந்தார். அவர் 33 பந்துகளில் அரை சதம் அடித்தார். கீப்பர்களில் விரைவாக அரை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இஷான் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ரிஷப் பந்த் 28 பந்துகளில் அரைசதம் அடித்ததே முதலிடத்தில் உள்ளது.