ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ இயக்குநரை இரவோடு இரவாக மத்திய அரசு மாற்றியது ஏன் என்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் உள்ள பர்சேத்பூரில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ இயக்குநரை நள்ளிரவு 1.30 மணிக்கு நீக்கியது ஏன் என்று வினவினார். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பிரதமர் மோடி அஞ்சுவதாக அவர் குற்றம் சாட்டினார். பிரதமர் மோடியின் ஆட்சியில் இளைஞர்களுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாமல் தொழிலதிபர்களின் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்வதாக ராகுல்காந்தி கடுமையாக சாடினார்.
Discussion about this post