கர்நாடகாவின் புதிய முதல்வர்… யார் இந்த பசவராஜ் பொம்மை

கர்நாடகாவின் இருபதாவது முதல்வராக பதவியேற்கிறார் பசவராஜ் பொம்மாய்.

எடியூரப்பா அவர்கள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று பெங்களூருவில் தனியார் விடுதியில் நடந்த பாஜகவின் சட்டமன்ற குழு கூட்டத்தில் பசவராஜ் பொம்மாய் அடுத்த முதல்வராக பதவியேற்க ஒருமனதாக தேர்வு.

எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளரான பசுவராஜ் கோபமாய் கடந்த இரண்டு வருடங்களாக கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர்.

61 வயதான பாசவராஜ் பொம்மாய் இதற்கு முன்பு 2008 முதல் 2013 வரை கர்நாடகாவில் நடந்த பாஜக ஆட்சியின் போது நீர்வளத் துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்து வந்தார்.

பெங்களூருவில் நடைபெற்ற சட்டமன்ற குழு கூட்டத்திற்கு மத்திய பொறுப்பாளராக தர்மேந்திர பிரதாப் மற்றும் எடியூரப்பா ஆகியோர் தலைமை வகித்தனர்.

பசவராஜ் பொம்மாய் அவரது தந்தை எஸ்.ஆர். பொம்மாய் கர்நாடகாவின் 11 ஆவது முதல்வராக கடந்த 1996 முதல் 1998 வரை பதவி வகித்தவர்.

1998 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் கர்நாடக சட்ட மேலவை உறுப்பினராக ஜனதா தளம் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டவர்.

2007 ஆம் ஆண்டு அவர் தந்தை மறைந்த பிறகு 2008ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த பசவராஜ் பொம்மாய் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள சிங்காவ் சட்டமன்றத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக 2008, 2013, மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றுள்ளார்.

Exit mobile version