மூடு டாஸ்மாக்க மூடு என்று, பெருங்குரல் எடுத்து பாடிய, சீஷன் சமூக ஆர்வலர் கோவனை, கண்டா வரச் சொல்லுங்க கோபாலபுரத்து கொத்தடிமையை கண்டா வரச் சொல்லுங்க என்று தேடும் நிலை ஏற்பட்டுள்ளது குறித்துச் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
கண்களில் ஆவேசம் கொப்பளிக்க, தொண்டை நரம்புகள் புடைக்க, டாஸ்மாக்கை மூடச் சொல்லி 2015ல் இப்படி பெருங்குரல் எடுத்துப் பாடியவர்தான் மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த கோவன்.
தஞ்சாவூர் மாவட்டம் பெருமங்களம் என்னும் ஊரில் விவசாய குடும்பத்தில் பிறந்த கோவன், ஐ.டி.ஐ படிப்பை முடித்துவிட்டு, 1996ல் திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றினார். மக்கள் கலை இலக்கிய கழகத்தில் அமைப்பில் சேர்ந்து பாடல்களைப் பாடிய கோவன், அதிமுக ஆட்சியில் டாஸ்மாக்கை மூடச் சொல்லி பாடிய பாடலில் ஆட்சியாளர்கள் குறித்து அநாகரிக வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் தேசவிரோத வழக்கில் கைது செய்யப்பட்டார்.
கோவனின் கைதுக்கு எதிராகவும், தமிழகத்தில் டாஸ்மாக்குக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர்தான் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்… ஆனால் இன்றோ அவர்தான் ஆளும் கட்சியின் முதல்வர்… ஆனால் டாஸ்மாக்கை மூடும் வழியைத்தான் காணோம்.. மாறாக மனமகிழ் மன்றம் என்னும் பெயரில் மதுவிற்பனை, விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற அனுமதி, தானியங்கி மதுபான விற்பனை எந்திரம் நிறுவுதல் என்று மதுவிற்பனைக்கு நூதன வழிகளை மேற்கொண்டு கோடிகளைக் குவித்து வருகிறார் தனது வீட்டு கல்லாவில்…
வேடந்தாங்கலுக்கு வரும் சீசன் பறவையாய் சமூக ஆர்வலர் அரிதாரம் பூசிக் கொண்டு அன்று ஸ்டாலினுக்கு ஆதரவாக டாஸ்மாக்கை மூடச் சொல்லி தொண்டை கிழிய கத்திய கோவனை இன்றைக்கு காணவில்லை. டாஸ்மாக் விற்பனை, மது விற்பனைக்கு நூதன வழிகளை திறந்துவிட்டுள்ள ஸ்டாலினின் ஆட்சிக்கு எதிராக கோவனின் குரல் ஒலிக்கவில்லை… ஆனால் அதே நேரம் திமுகவுக்கு ஆதரவாக ஆளுநருக்கு எதிராக கச்சேரியை அரங்கேற்றியிருக்கிறார்.
செல்லாத கவர்னருக்கு செலவு கோடிக்கணக்கு… நீட் தேர்வு ரத்து தீர்மானம் உள்பட 66 தீர்மானத்தை கண்டுகொள்ளாத ஆளுநருக்கு தமிழக அரசு தருவது தெண்ட சம்பளம் என்றெல்லாம் தனது பாட்டில் வெளிப்படுத்தியிருக்கிறார் கோவன்.
டாஸ்மாக்குக்கு மட்டுமல்ல… மணல் கொள்ளைக்கும் எதிராகக் குரல் எழுப்பியது இந்த மைக் கோவன் கும்பல்…
திமுக ஆட்சியில் மணல் கொள்ளையை தடுத்த கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டு ஒரு வாரம் ஆகியும் இன்னமும் ஒரு ஒப்பாரி சத்தத்தைக் கூட கோவன் குழுவின் குரல் ஒலிக்கவில்லை…
இப்படி திமுகவின் கைப்பாவையாக, ஊது குழலாக, 200 ரூபாய் உபிஸுக்கும் மேலாகச் செயல்படும் கோமாளி கோவனை கண்டா வரச் சொல்லுங்க… கோபாலபுரம் கொத்தடிமையை கண்டா வரச் சொல்லுங்க என்று சமூக ஊடகங்களில் சாடுகிறார்கள் இணைய வாசிகள்.
டாஸ்மாக்கை மூடு என்ற கோவன், இன்று 81கோடி ரூபாயில் கடலில் பேனா சின்னம் அமைக்கும் திமுகவால், மீனவர்களின் வாழ்வாதாரமும், மீன்வளமும் பாதிக்கப்படுவதை கண்டித்து தூக்கு பேனாவை தூக்கு என்று ஏன் குரல் எழுப்ப முடியவில்லை என்பதும் அவர்களின் கேள்வியாக உள்ளது. இது கோவன் என்னும் ஒரு சீஷன் சமூக ஆர்வலர்களுக்கான கேள்வி மட்டுமல்ல… அதிமுக ஆட்சி என்றால் மட்டும் வீதிக்கு வரும் ஒவ்வொரு சீஷன் சமூக ஆர்வலர்களுக்குமான கேள்வியே!
Discussion about this post