வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெண்களுக்கு இதயக் குறியீடு பொருந்திய எமோஜிக்களை அனுப்பினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று குவைத் அரசு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
நாம் பயன்படுத்தும் தகவல் தொடர்பு செயலிகளில் தலையாயது வாட்ஸ் அப் ஆகும். இதனை தமிழில் கட்செவி அல்லது புலனம் என்றும் அழைப்பார்கள். ஒரு செய்தியை மற்றவருக்கு விரைந்து சொல்ல வேண்டும் என்றால் வாட்ஸ் அப்பினை தான் பயன்படுத்துகிறோம். அப்படிப்பட்ட வாட்ஸ் அப்-பில் பல குறியீடுகள் உண்டு. இதனை எமோஜிக்கள் என்றும் சொல்லலாம். நம் மனநிலைக்கு ஏற்ப நண்பர்களுக்கும், மனம் கவர்ந்தவர்களுக்கும் எமோஜிக்களை அனுப்பவது அனைவரின் வாடிக்கை. அந்த எமோஜியில் இதயக் குறியீடு ஒன்றும் உண்டு. தற்போது இந்த இதயக்குறியீடு தான் பூதாகரமாக எழுந்துள்ளது. இந்த பூதாகரமான விஷயம் குவைத் நாட்டில் தான் நடந்தேறியுள்ளது.
பெண்களுக்கு வாட்ஸ் அப்பில் இதய எமோஜிக்கள் அனுப்பினால் அதனை பாலியல் குற்றமாக கருத்தில் கொண்டு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்றும், இரண்டாயிரம் முதல் ஒரு லட்சம் சவுதி ரியால்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்றும் சவுதி அரசு கூறியுள்ளது. ஒரு புறாவுக்கு போரா என்பது மாதிரி ஒரு எமோஜிக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் தேவைதானா கோபி.. என்று கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்!