இன்றைய சட்டப்பேரவையில் பேசிய கழகத்தின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பேசியவை :
எங்களைப் பற்றி பேசுவதற்கு செல்வப்பெருந்தகைக்கு என்ன தகுதி இருக்கிறது.
ஆதிதிராவிட மக்களுக்காக எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் பேசிவிட்டு பதில் உரையை தான் புறக்கணித்தார்கள். வெளிநடப்பு செய்வது பிரதான எதிர்க்கட்சியின் ஜனநாயக உரிமை இதைப் பற்றி பேசுவதற்கு செல்வப் பெருந்தகைக்கு என்ன தகுதி இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் கண்டனம் தெரிவித்தார். அவையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பேசுவதற்கு ஜனநாயக உரிமை மறுக்கப்படுகிறது அதனால் தான் பதில் உரையை அதிமுக புறக்கணிக்கிறது
பிறகு மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசினார்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் கொள்கைகளை அதிமுக ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி மக்கள் நலனுக்காக செயல்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவருக்கு பகல் 2 மணிக்கு பேச வாய்ப்பு கொடுத்ததாகவும் தற்போது தாமதமாக வாய்ப்பு வழங்குவது முறையற்றது என்றும் கூறினார்.
மேலும் பொதுச் செயலாளராக அங்கீகரித்ததற்கு வாழ்த்துகள் தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தற்போது காவல்துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசுக்கும் சரியான புரிந்துணர்வு இல்லையோ என்ற சந்தேகம் உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு பாதுகாப்பான மாநிலம் பாதுகாப்பான நகரம் சென்னை இருந்தது. கொரோனா பெரும் தொற்று மற்றும் மறை புயல் வெள்ளம் அனைத்தும் சிறப்பாக கையாளப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் காவல்துறைக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. பணியின் போது உயிரிழந்தால் 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தப்பட்டது. காவல்துறை பணியில் இருக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கக்கூடிய இடர்பாடுகளை உயர்த்தி வழங்கியது அதிமுக.
காவல்துறையினருக்கு வழங்கப்படும் எரிபொருள் உயர்த்தி வழங்க வேண்டும்
அதிமுக பொற்கால ஆட்சியில் தான் காவலர் அனைத்து வசதி கழகம் துவங்கப்பட்டது இதன் மூலம் ஆயிரக்கணக்கான காவல்துறையினருக்கு வீடுகள் வழங்கப்பட்டது
அதிமுக ஆட்சி காலத்தில் காவலர்களுக்கு காவலர் அங்காடி என சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது குறைந்த அளவில் காவலர்கள் பொருட்களை வாங்க ஏதுவாக இந்த திட்டத்தை அமைந்தது. அதிமுக ஆட்சிக்காலத்தில் சிறப்பு பிரிவுகள் துவங்கப்பட்டது. புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் துவங்கப்பட்டது. 10 கமாண்டோ சிறப்பு பிரிவு அதிமுக ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்டது. இந்தியாவில் முதல்முறையாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துவங்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான். அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட காவலன் செயலி தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.