20 நாடுகளில் பரவி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைப் பலி கொண்ட கொரோனோ வைரஸ்சின் பெயர் மாற்றப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது. கொரோனா வைரஸ்சின் பெயர் மாறியது ஏன்? அதன் புதிய பெயர் என்ன?
கொரோனா என்ற லத்தீன் சொல்லுக்கு மலர் மகுடம் என்று அர்த்தம். இதனால் மலர் மகுடம் போன்ற தோற்றம் கொண்ட பல பொருட்களுக்கு கொரோனா என்ற பெயர் சூட்டப்பட்டு உள்ளது.இந்நிலையில், மலர் மகுடம் போன்ற தோற்றம் கொண்ட வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டபோது, அதற்கும் கொரோனா வைரஸ் என முதலில் பெயர் சூட்டப்பட்டது, பின்னர் அந்த வைரஸ்ஸின் 6 இனங்களும் கொரோனா என்றே அழைக்கப்பட்டன. அந்த முதல் 6 கொரோனா வைரஸ்கள் அனைத்தும் ஆபத்து குறைவானதாகவே இருந்தன.
இந்நிலையில் சீனாவில் 2019ஆம் ஆண்டில் பரவிய புதிய வைரஸ், கொரோனாவின் 7ஆவது இனமாக இருந்ததால், அதற்கும் ‘கொரானோ வைரஸ்’ – என்ற பெயரே வைக்கப்பட்டது. இந்த வைரஸ் முந்தைய கொரோனா வைரஸ்களை விடவும் அபாயகரமாகதாக உள்ளது. உலகெங்கும் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய 7ஆவது வகை கொரோனா வைரசுக்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர்.
இதனால் கொரோனா என்ற சொல்லைப் பயன்படுத்திவரும் பல்வேறு மக்களும், நிறுவனங்களும் வைரஸ்சின் பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக மெக்சிகோ நாட்டில் உள்ள பிரபல பியர் தயாரிப்பு நிறுவனமான ‘கொரோனா பியர்’ இதனால் பல பிரச்னைகளை சந்தித்தது. எனவே கொரோனா வைரஸ்சின் பெயரை மாற்றினால் இந்திய மதிப்பில் சுமார் 100 கோடி ரூபாயைத் தருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்தது.
இப்படிப்பட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளையும் ஏற்ற உலக சுகாதார நிறுவனம், நேற்று கொரோனா வைரஸ்சின் பெயரை மாற்றி உள்ளது. அதற்கு கொவிட்-19 (Covid-19)என்று தற்போது பெயர் சூட்டப்பட்டது. கொரோனா, வைரஸ், டிசீஸ் (disease) – ஆகிய 3 சொற்களில் இருந்து இந்தப் புதிய வார்த்தை உருவாக்கப்பட்டு உள்ளது, இதில் உள்ள 19 என்பது, வைரஸ் பரவத் தொடங்கிய ஆண்டான 2019-ஐ குறிக்கின்றது.
வைரஸ்சின் இந்தப் புதிய பெயர் எந்த ஒரு இடத்தையோ, நபரையோ, குழுவையோ, விலங்கையோ குறிப்பிடாத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.