அஜித் குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிநாட்டில் மட்டும் 1MillionUSD வசூலாகி உள்ளது என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட்டில் ஹிட்டான பிங்க் படமானது தமிழில் அஜித் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகியது.வெளியாகிய நாள் முதல் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.மேலும் ,சமூக வலைதளங்களில் பலரும் படத்தை பற்றிய கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், படம் வெளியாகி 3வது நாளான இன்று படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் படத்தின் வசூல் குறித்து தெரிவித்துள்ளார்.அதாவது,overseas box office -ல் மட்டும் 1MillionUSD வசூல் ஆகியுள்ளது என பதிவிட்டுள்ளார்.இந்திய ரூபாய் மதிப்பின் படி சுமார் 7 கோடியாகும்.தற்போது #1MillionUSDForNKPinOverseas என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
*Nerkonda Paarvai shatters all records , grosses over 1 Million USD at the Overseas Box Office* #AjithKumar #HVinoth @ZeeStudiosInt @BoneyKapoor @nerkondapaarvai #BayViewProjects @SureshChandraa @vidya_balan @thisisysr @nirav_dop @dhilipaction @RangarajPandeyR @DoneChannel1 pic.twitter.com/tRDsc4qj8R
— Boney Kapoor (@BoneyKapoor) August 11, 2019
போனி கபூர் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து பலரும் #1MillionUSDForNKPinOverseas என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி பல போஸ்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
Feeling Sad For All So Called Box Office Trackers Who Were Trying To Downplay #NerkondaPaarvai's BO Numbers. Thanks to @BoneyKapoor sir for Making it Official. Now, Waiting for TN & ROI's Official BO Numbers! ?#1MillionUSDForNKPinOverseas pic.twitter.com/fdRtni8EF2
— TRENDS AJITHᴺᴷᴾ (@TrendsAjith) August 11, 2019
King Remins KING ALWAYS ??
Thala BOXOFFICE KING??#1MillionUSDForNKPinOverseas pic.twitter.com/8vmDyxGcUn
— Vellore Ajith Associationᴺᴼᴹᵉᵃⁿˢᴺᴼ (@AjithFC_VELLORE) August 11, 2019