சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் #Masumustresign.. என்ன நடந்தது?

எழும்பூர் அரசு மருத்துவமனையில் தனது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விதம் தவறாக போய்விட்டது என்று காவலர் ஒருவர் நடுரோட்டில் போராடி வரும் கணொளிக் காட்சியானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவரது குழந்தைக்கு நெப்ராட்டிக் பிரச்சினை என்று தெரியவந்த நிலையில், மூன்று வயதிலிருந்து எட்டு வயது வரை எழும்பூர் அரசு மருத்துவமனையில் மட்டுமே இதுநாள் வரை சிகிச்சைப் பார்த்து வந்துள்ளதாக அக்காணொளியில் கூறியுள்ளார்.  மருத்துவர்கள் கொடுத்த மருந்துகளின் விளைவால் குழந்தையின் வலது காலில் அரிப்பு ஏற்பட்டது. மீண்டும் அதே மருத்துவர்களிடம் சென்று காண்பித்து மாத்திரைகள் பெற்றேன். கல்லீரல், மண்ணீரல் பிரச்சினை என் குழந்தைக்கு உள்ளது என்பதை கண்டறியாமல் க்ளாடெஸ்ட் என்று சொல்லி தவறான மருந்து ஏற்றப்பட்டு கால் பாதம் கருகும் நிலைக்கு வந்துவிட்டது. மேலும் உடலில் உள்ள இரத்தம் எல்லாம் கெட்டுபோய் எதிர்மறை விளைவு ஏற்பட்டு விட்டது. எனக்கும் என் மனைவிக்கும் தெரியாமல் என் குழந்தையை ஐசிஹெச்சிற்கு எடுத்து வந்து டயலிசஸ் பண்ணியுள்ளார்கள். இதனால் என் குழந்தைக்கு நரம்பியல் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது.

இதற்கு அரசும் சுகாதாரத்துறையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், துறை அமைச்சரும் இச்செய்தியை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதனால் சென்னை தலைமைச் செயலகம் வாளாகத்தில் காவல்துறை அதிகாரி தனது குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்று சமூக வலைதலைங்களில் நெட்டிசன்களும் மற்றும் சில பொதுமக்களும் கேள்வியெழுப்பிய வண்ணம் உள்ளனர்.

Exit mobile version