ஆசியா தெரியும், ஐரோப்பா தெரியும், அது என்ன ஓசியானியா? எதாவது புது கண்டமா இருக்குமோ? அவதார் திரைப்படத்துல வர்ற மாதிரி இப்படி ஒரு உலகம் தனியா இயங்கி கிட்டு இருக்குனு நம்மள்ள பல பேருக்குத் தெரியாது. இந்த ஓசியானியா-னா என்ன? அது எங்க இருக்கு? தெரிஞ்சுக்கிடலாம் வாங்க!
நம்ம எல்லாருக்கும் பசுபிக் பெருங்கடல்னா என்னனு தெரியும். உலகத்திலேயே பெரிய கடல்னு இததான் சொல்வாங்க. அப்படிப்பட்ட கடலைச் சுற்றி இருக்குற நிலங்களையும் குட்டிக் குட்டித் தீவுகளையும் சேத்துதான் ஓசியானியா-னு பேர் வச்சுருக்காங்க. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூல் டூமோண்ட் டேர்வில் அப்டிங்கிற பயணிதான் ஓசியானியா-ங்கிற பெயர் முதல் முதல்ல வைக்கிறாரு. இதொட பரப்பளவு கிட்டத்தட்ட, என்பத்தஞ்சு லட்சத்து இருபத்தஞ்சாயிரத்து தொள்ளாயிரத்து என்பத்தொன்பது சதுர கிலோ மீட்டர். அதாவது 2021 கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை மட்டுமே நாலு கோடியே நாப்பத்து நாலு லட்சத்து தொன்னுற்றோராயிரத்து எழுநூற்று இருபத்து நாலு.
ஓசியானியா-ல இருக்குற தீவுகள மூன்று பகுதியாகளாக பிரிக்கலாம்…
மெலனீசியா, மைக்ரோனீசியா, பொலினீசியா
இந்த மூன்றுபோக ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகள் உள்ளடக்கிய ஆஸ்திரலேசியா மற்றும் மலேத் தீவுக்கூட்டங்கள் போன்றவை இதில் அடங்கும்.
ஆஸ்திரலேசியா-னு எடுத்துக்கிட்டோம் அப்டினா… ஆஸ்திரேலியா, கிறிஸ்துமஸ் தீவுகள், கொக்கோசு தீவுகள், பவளக்கடல் தீவுகள், நியூசிலாந்து, நேர்போக் தீவு இப்டி ஒரு செட் ஆஃப் தீவுகள் இதுல அடங்கிருக்கு…
முதல்ல ஒரு மூனு சொன்னோம் இல்லையா.. அத எடுத்துக்கிட்டோம் அப்டினா..
முதல்ல மெலனீசியா..
இதுல பிஜி, நியூ கடலோனியா, பப்புவா நியூ கினியா, சாலமன் தீவுகள், ரிபப்ளிக் ஆஃப் வனுவாட்டு, இது மாதிரியன தீவுகள் அடங்கும்.
இரண்டாவதா மைக்ரோனீசியா…
இதுல குவாம், கிரிபாஸ், மார்ஷல் தீவுகள், நவுரு, வடக்கு மரியானா தீவுகள், பலாவ், வேக் தீவு இப்படி சில தீவுகளும் அடங்கும்..
கடைசியும் மூனாவதுமான பொலினீசியா…
இதுல சமோவா, அமெரிக்க சமோவா, குக் தீவுகள், ஈஸ்டர் தீவுகள், ஃப்ரெஞ்ச் பொலினீசியா, ஹவாய், நியூ வே, பிட்கன் தீவுகள், டொக்கெலாவ், தொங்கா, துவாலு, வாலிஸ் அண்ட் புட்டுனா தீவுகள்னு ஒரு பெரிய நிலப் பரப்பே அடங்கிருக்கு…