சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மீது, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வலியுறுத்தப்போவது இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் திடீரென அறிவித்துள்ளார். இந்த முறையும் தீர்மானம் தோல்வி அடைந்து விடும், மூக்கறுப்பட்டு விடும் என்பதே ஸ்டாலினின் இந்த திடீர் பல்டிக்கு காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஸ்டாலின் பின்வாங்கியதன் பின்னணி என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்…
சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதவாக மே 2-ம் தேதி திமுக கடிதம் அளித்தது. திமுகவின் தீர்மானம் ஜூலை 1ம் தேதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தப்போவது இல்லை என்றார். இதை வாய்மொழியாக தெரிவித்து சபாநாயகரிடம் கடிதமும் கொடுத்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசை கவிழ்த்து விடலாம் என ஸ்டாலினும், திமுகவினரும் பகல் கனவில் மிதந்தனர். முன்பு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்து வந்த அதிமுக அரசு, இடைத்தேர்தலுக்கு பின்பு மக்களின் பேராதரவுடன் தற்போது அசூர பலத்தை பெற்றுள்ளது.
தமிழக சட்டப்பேவையில் அதிமுகவின் பலம் சபாநாயகருடன் சேர்த்து 123ஆக உள்ளது. திமுகவுக்கு 100 எம்.எல்.ஏ.க்களும், கூட்டணி கட்சிகளான காங்கிரஸுக்கு 7, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்க்கு ஒன்று என மொத்தம் 108ஆக உள்ளது. சுயேட்சையாக தினகரன் உள்ளார். விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த சூழலில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் பலன் இல்லை என்பதை திமுகவும் அதன் தலைவரும் உணர்ந்து இருப்பார்கள்.
ஏற்னவே ஒரு முறை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து தோற்றுப்போய் மூக்கறுப்பட்ட திமுகவும், அதன் தலைவர் ஸ்டாலினும், மீண்டும் ஒரு முறை தோல்வியை சந்திக்க விரும்பாததுதான் இந்த திடீர் பல்டிக்கு காரணம் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
முன்பு இருந்த பேரவை தலைவர்களை விட, தற்போது உள்ள பேரவை தலைவர் தனபால் மிகவும் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து, எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் பேச அதிக வாய்ப்பளித்து வருகிறார். இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அது திமுக மீதே மக்களுக்கு வெறுப்பையும், அவப்பெயரையும் உண்டாக்கி விடும் என்பது தான், திமுக பின்வாங்கியதன் பின்னணியாக கூறப்படுகிறது.
2006-ல் இருந்து 2011 வரை, வெறும் 96 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு மைனாரிட்டி ஆட்சியை திமுக நடத்தியது. அப்போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைத்திருந்தால், பல தீர்மானங்களை கொண்டு வந்து திமுகவை ஆட்சியில் இருந்து தள்ளி இருக்க முடியும். ஆனால் அவர் 2011ம் ஆண்டு வரை காத்திருந்து, மக்கள் சக்தியால் ஆட்சியை வென்றெடுத்து, முதலமைச்சர் சிம்மாசனத்தில் அமர்ந்தார். அந்த பண்பும், பெருமையும், ஜனநாயகத்தை மதிக்கும் மாண்பும், அதிமுகவுக்கே உரியது. திமுக எப்போதுமே புறவழியில் முயற்சிக்கும் இயக்கம் என்பதற்கு நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு சாட்சி.
Discussion about this post