பெரு நாட்டில் லாம்பேகியூ கடற்கரை பகுதியில் கரையில் சிக்கி தவித்த திமிங்கலத்தை விலங்கு நல ஆர்வலர்கள் கடலுக்குள் மீண்டும் விட்டு அதன் உயிரை காப்பாற்றினர்.
பெரு நாட்டில் ஹம்ப்பேக் வகையை சேர்ந்த திமிங்கலம் ஒன்று லாம்பேகியூ கடற்கரை பகுதியில் சிக்கிக் கொண்டது. 10 மீட்டர் நீளமும், ஆறரை டன் எடையும் கொண்ட திமிங்கலம் பெரிய அலையில் சிக்கி கடற்கரை ஓர் மணல் பகுதியில் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதனை கண்ட விலங்குகள் நல ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து உயிருக்கு போராடிய திமிங்கலத்தை மணலில் இருந்து இழுத்து சென்று கடலுக்கு மீண்டும் விட்டனர். கடந்த 15 நாட்களில் மட்டும் பெரு கடற்கரையில் அலையில் சிக்கி திமிங்கலம் கரை ஒதுங்கி இருப்பது 2வது முறையாக நிகழ்வது குறிப்பிடத்தக்கது.