கடற்கரையில் I love Cuddalore என்ற வாசகம் அமைப்பு

கடலூர் வெள்ளி கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், பிளாஸ்டிக் விழிப்புணர்வு பதாகையினை துவக்கி வைத்தார்.

2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது. இந்த நிலையில் கடலூர் வெள்ளி கடற்கரையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், ”ஆரோக்கியமான வாழ்க்கை” நெகிழியை தவிர்ப்போம் என்ற நோக்கில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் எம்.சி. சம்பத் பங்கேற்று கடற்கரையில் அமைக்கப்பட்ட  பிளாஸ்டிக் விழிப்புணர்வு பதாகையினை துவக்கி வைத்தார். வெள்ளி கடற்கரையில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு I love Cuddalore  என்ற வாசகம் அமைக்கப்பட்டுள்ளது. இது கடற்கரைக்கு வரும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. I love Cuddalore என்ற வாசகத்தின் முன்பு பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Exit mobile version